பாடசாலைகள் ஆரம்பம் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இந்த வருடத்திற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதேவேளை, தற்போது சிறுவர்களுக்கு சிக்குன் குனியா பரவி வருவதால், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சிறுவர்கள் இருப்பின் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுவதன் காரணமாக, அதிகளவு நீரை அருந்துவது மிகவும் அவசியமானது என தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.