நாளை பாடசாலை நடைபெறும் - கல்வி அமைச்சு தகவல்
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (09) செவ்வாய்க்கிழமை வழமைபோல் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 200இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) திங்கட்கிழமை மற்றும் நாளை (09) செவ்வாய்க்கிழமை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை (9) வழமைபோல் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.