பாடசாலை தவணைப் பரீட்சை இன்று ஆரம்பம்
கடந்த மாதம் 16ஆம் திகதி தென் மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தப்படவிருந்தது.

தென் மாகாண பாடசாலைகளுக்கான தவணைப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அந்த மாகாணத்தின் கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி தென் மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தப்படவிருந்தது.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த வாரம் தென் மாகாண பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.