ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனவரி 3, 2023 - 14:42
ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும்,10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறவுள்ளமையினால் ஆண்டின் முதல் 3 மாதங்களில் சகல வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில்,கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிர்வாக சேவையில் 900 வெற்றிடங்களும், 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்களும், 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான ஆசிரியர்கள் வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆண்டின் முதல் 3 மாதங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் அமைச்சரவையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் கல்வி ஆண்டு ஆரம்பமாகவுள்ளது.

எனவே பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!