முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீட்டிப்பு
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.