நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த இலங்கை போட்டியாளர்
சரிகமப வில் கலந்துகொண்ட இலங்கை போட்டியாளர் சபேசன் தன் குரலால் ஒட்டு மொத்த அரங்கத்தையே ஈர்த்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் வழங்கும் ‘சரிகமப சீனியர் சீசன் 5’, இசையின் தேடலுக்காக காத்திருந்த இசைப் பிரியர்களுக்கு ஒரு திருவிழா போலவே ஆரம்பமாகியுள்ளது.
தொடக்க வாரங்களில் இடம்பெற்ற மெகா ஆடிஷனில் பங்கேற்ற பலர் குரலின் கலையால் நடுவர்களை வியக்க வைத்தனர்.
சரிகமப வில் கலந்துகொண்ட இலங்கை போட்டியாளர் சபேசன் தன் குரலால் ஒட்டு மொத்த அரங்கத்தையே ஈர்த்துள்ளார்.
இந்த வாரம் Introduction Round நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் இலங்கை போட்டியாளர் சபேசன் இன்னிசை பாடி வரும் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டுகின்றனர். இவரின் பாடல் திறமையால் வெற்றிப்பெற வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.