அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு; வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்புடன் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.