இந்த ஆண்டு சம்பளத்தை அதிகரிக்க முடியாது - நிதியமைச்சு
போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு இவ்வருடம் பணத்தை ஒதுக்க முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்குப் போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நாட்டின் பண கையிருப்பு நல்ல நிலையை எட்டினால், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.