பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சஜித் கூறியது!

சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

ஜுலை 13, 2024 - 10:27
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சஜித் கூறியது!

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். பெற்றோரை பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு - திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ''மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல்.

''சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

''இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும். சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

''தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது” என்றார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!