மீண்டும் காயமடைந்த பத்திரன... நடந்தது என்ன? ருதுராஜ் விளக்கம்!
தசைபிடிப்பு காரணமாக பத்திரன இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்ய வழக்கம் போல் சிஎஸ்கே அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.
இந்த போட்டியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர்களான பதிரான மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் விலகியுள்ளனர்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது நட்சத்திர வீரர் பதிரான வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்தார். துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தான் டெத் ஓவர்களை வீசினார்கள்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாகவும் பதிரானா காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன்பின் பதிரான தொடர்ச்சியாக விளையாடி வந்த சூழலில், மீண்டும் காயமடைந்துள்ளார்.
தசைபிடிப்பு காரணமாக பதிரான இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி சிக்கலில் இருக்கும் போது பதிரானவைதான் நம்பியிருந்தது. இதனால் 6 போட்டிகளில் விளையாடிய பதிரான மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பதிரானவின் இடத்தை சிஎஸ்கே அணி எப்படி நிரப்ப போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.