இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

ஜுலை 18, 2023 - 13:00
இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் புதிய தலைவராக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.ரூபதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இளைஞர் அணியின் புதிய பொதுச் செயலாளராக சுதேச மருத்துவ வைத்தியரும், சமூக செயற்பாட்டாளருமான ரமேஷ்குமார் சுப்பிரமணியம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

எனினும், தற்போது திறமைமிக்க இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அந்த வகையிலேயே இந்தப் பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!