வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக ரூ.24 இலட்சம் மோசடி

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக இவர் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளார்.

ஆகஸ்ட் 20, 2024 - 15:14
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக ரூ.24 இலட்சம் மோசடி

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக 24 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதியை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக இவர் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு தொழில் தேடுபவர்களிடம், மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணியாக இவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவருந்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!