சத்தமின்றி ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை... எந்த கேப்டனும் செய்யவில்லை.!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

மார்ச் 5, 2025 - 11:59
சத்தமின்றி ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை... எந்த கேப்டனும் செய்யவில்லை.!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியுடன் தொடர்ந்து 3-வது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மொத்தம் 5-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது.

இதனால், சத்தமின்றி ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர், 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் முழுநேர கேப்டன் ஆனார். 

அப்போது இருந்து பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில், ஐ.சி.சி.யின் ஒவ்வொரு போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் இந்தியா முன்னேறியது

இதனால், ஐ.சி.சி.யின் அனைத்து வகையான போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். 

2023-ம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை இந்தியா முன்னேறி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் 2023 போட்டி தொடரில் தோல்வியே அடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

2024-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியின்போது, திறமையாக அணியை வழிநடத்தி சென்றார் ரோகித். இதனால், 2007-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக கோப்பையை இந்திய அணி வெல்ல உதவினார். 

ரோகித்தின் சாதனை பட்டியலில், சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் மட்டும் மீதமிருந்தது. இதிலும், இறுதி போட்டிக்கு இந்திய அணியை தலைமையேற்று நடத்தி சென்று வரலாறு படைத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!