அஸ்வின் குறித்து குண்டை தூக்கி போட்ட ரோகித் சர்மா.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?

உலகக் கோப்பைக்கான இந்திய அணி: உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் திகதி தான் கடைசி நாள் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

செப்டெம்பர் 27, 2023 - 10:06
அஸ்வின் குறித்து குண்டை தூக்கி போட்ட ரோகித் சர்மா.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?

உலகக் கோப்பைக்கான இந்திய அணி

உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் திகதி தான் கடைசி நாள் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்காட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்ட நிலையில் அவருடைய காயம் முழுமையாக குணமடையாததால் அவர் கடைசி போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் அஸ்வினின் உலகக்கோப்பை கனவு உறுதி என ரசிகர்கள் நம்பினர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதில் அஸ்வின் குறித்து பேசிய அவர்,அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்.

அவருக்கு கிரிக்கெட் எப்படி அறிவுபூர்வமாக விளையாட வேண்டும். நெருக்கடியை எப்படி கையாள வேண்டும் என்பதில் குறித்து பல அனுபவம் இருக்கிறது. 

கடந்த ஒரு ஆண்டாக அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என்பதுதான் குறையாக இருந்தது. அவர் சமீப காலமாக 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய தரத்தையும் அனுபவத்தையும் உங்களால் அவரிடமிருந்து எடுக்க முடியாது.

கடந்த இரண்டு போட்டிகளில் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை அனைவரும் பார்த்து இருப்போம். உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு ஏற்பட்டால் அஸ்வினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். 

இந்த கட்டத்தில் அணியை பார்க்கும் போது பிரமாதமாக இருக்கிறது. அனைத்து வீரர்களுக்குமே ஒரு பேக்கப் வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது அனைத்து வீரர்களுக்கும் நாங்கள் பல போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்துவிட்டோம். காயத்திலிருந்து மீண்டு வந்த வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது உடல் தகுதியை நிரூபித்ததுடன் இல்லாமல் போட்டியிலும் விளையாடி பார்மையும் நிரூபித்து விட்டார்கள். இப்போது அணி நிலையான தன்மையில் இருக்கிறது. 

தற்போது இதே நிலையில் முன்னேறி செல்ல வேண்டிய வாய்ப்பை மட்டும் தான் நான் பார்க்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!