ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்தார் - ரசிகர்கள் சோகம்

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜுன் 30, 2024 - 12:17
ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்தார் - ரசிகர்கள் சோகம்

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை தட்டி தூக்கியது.

போட்டி முடிந்தவுடன் இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். 

தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தனது ஓய்வை அங்கு அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் 2 முக்கிய நட்சத்திர வீரர்கள் இப்படி ஒரே தருணத்தில் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!