ரிஷாத் எம்.பி. பயணித்த கார் விபத்து
காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி. பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வௌ பிரதேசத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சைக்கிள் ஒன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது ரிஷாத் பதியுதீன் எம்.பி. பயணித்த கார் சற்றே விலக முற்பட்டுள்ளது. அவ்வேளையில், கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது காரில் பயணித்த ரிஷாத் பதியுதீனுக்கு எந்தவித காயங்களும் ஏற்படாத நிலையில், சைக்கிள் செலுத்துநருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.