தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்: மாஸ் கம்பேக்
சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 376 ரன்கள் குவித்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86 மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களுடன் இந்தியா வலுவான அடித்தளத்தை அமைத்தது. வங்கதேசத்திற்கு ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்களும், இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
227 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (5), ஜெய்ஸ்வால் (10), மற்றும் விராட் கோலி (17) துரிதமாக ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக க்ரீஸில் சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக இணைந்து ரன்கள் குவிக்கத் தொடங்கினர். மூன்றாம் நாளின் உணவு இடைவேளைக்குள் இருவரும் அரை சதம் அடித்து வங்கதேச பவுலர்களை திணற வைத்தனர்.
ரிஷப் பண்ட், தனது அசரடியாக பேட்டிங் செய்து, 109 (127) ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும்.
சேப்பாக்கத்தில் அதிரவிட்ட சுப்மன் கில்: "டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செட் ஆகமாட்டேனா?" - தரமான சம்பவம்
இந்த சதத்தின் மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்தார்.
தோனி தனது 144 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள் அடித்ததை, பண்ட் வெறும் 58 இன்னிங்ஸ்களிலேயே அடைந்து, தனது திறமையை நிரூபித்தார்.
மேலும், கடந்த வருடம் கார் விபத்தில் காயம் அடைந்த பண்ட், 634 நாட்கள் கழித்து, தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
அப்போட்டியில், யுவராஜ் சிங் போல அபாரமான கம்பேக் கொடுத்து, சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மற்றவசத்தில், சுப்மன் கில் 119* ரன்கள் அடித்து அசத்தினார், மேலும் கேஎல் ராகுல் 22* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததால், இந்தியா 287-4 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம், வங்கதேசத்திற்கு 515 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.