குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான அறிவிப்பு!
இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
“நாடளாவிய ரீதியில் 34 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும். மாவட்ட செயலகங்கள் ஊடாக தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்கப்பட உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.