பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைப்பு - முழு விவரம்
2025ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகள் நடாத்தப்படும் நிலையில், அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்கள் வருடாந்த கற்றலுக்காக வருகை தரும் நாட்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில், முதல் 03 வாரங்கள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடத்திற்கான 26 பொது விடுமுறை நாட்களில் 04 விடுமுறை நாட்கள் மாத்திரமே வார இறுதி நாட்களில் வருவதுடன், ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது என்பதால், பாடசாலைகளை நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.