மின் கட்டணம் குறைந்தது; நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜுலை 1, 2023 - 00:11
மின் கட்டணம் குறைந்தது; நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (30) நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

மின்கட்ட குறைப்பு விவரம்

வீட்டுப் பாவனை 0 - 30 அலகுகளுக்கு மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படவுள்ளது. 

ஓர் அலகிற்கு 30 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும்.

மாதாந்த கட்டணம் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்கு கீழ் உள்ள பிரிவில் ஓர் அலகுக்கான கட்டணம் 42 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. 

மாத கட்டணம் 650 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. 

91 -120 அலகுகளுக்கான கட்டணம் 42 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. 

மாதாந்த கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. 

வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குறைந்த நுகர்வு கொண்ட மத ஸ்தலங்களுக்கு ஓர் அலகிற்கு ரூ.10 ஆகும். அதாவது 30 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!