மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது இதற்காகவே... வெளியான தகவல்!
1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், வெளிநாட்டு கையிருப்பை பராமரிக்க குறைந்த பட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகவே மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாதத்துக்குள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.