முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன பிணையில் விடுவிப்பு
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.

வீதி விபத்து தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை மற்றும் 2500 ரூபாய் காசுப்பிரணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய் எல்.எம்.விஜேசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.