யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வருகை தந்த ரம்பா
எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்தனர்.
எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியானது கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்தது.
எனினும், அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.
மேலும், இசை நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.