ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான்; ரசிகர்கள் சோகம்

ஐ.பி.எல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியேறியுள்ளது.

மே 2, 2025 - 11:55
மே 2, 2025 - 11:56
ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான்; ரசிகர்கள் சோகம்

ஐ.பி.எல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியேறியுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 
 
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரியான் ரிக்கல்டன் 61 ஓட்டங்களை குவித்தார். ரோஹித் சர்மா 53 ஓட்டங்களைப் பெற்றார். 
 
இதனையடுத்து, 218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ஓட்டங்களை பெற்றார்.
 
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அந்த அணியில் ரசிகர்கள் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!