பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்
பொகவந்தலாவை, பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவை, பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏ.பிரியதர்ஷினி என்ற மாணவியே, தனது வீட்டுக்குள் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சிறுமியின் மூத்த சகோதரி, தன்னை திட்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.