15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு
எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை இன்று (10) அறிவித்துள்ளார்.
தமிழ் - சிங்களப் புத்தாண்டு விடுமுறை தினங்களில் வருவதனால், 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது, எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.