விபசார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து அழகிகள் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேக நபர்களில், இலங்கையைச் சேர்ந்த யுவதியும் முகாமையாளரும் இந்த விபசார மோசடியை நடத்தும் முன்னாள் இராணுவ அதிகாரியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் விபசார நிலையம் இரகசியமாகக் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தங்கியிருந்து விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம் பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு கூட இல்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.