பெண்ணுக்கு ஆபாச சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது!
பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவுக்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

பெண் ஒருவருக்கு ஆபாச கை சமிக்ஞை காட்டிய குற்றச்சாட்டில் ஹோமாகம - புறக்கோட்டை வழிதடத்தில் பயணிக்கும் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவுக்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
இதன்போது, டிக்மன் சந்தியின் வீதி விளக்குகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட கார், பஸ்ஸை கடந்து செல்ல முற்பட்ட போது, பஸ்ஸின் ஜன்னல் வழியாக வலது கையை நீட்டி ஆபாசமான கை சமிக்ஞையை சாரதி காட்டியுள்ளார்.
இது தொடர்பில், குறித்த பெண் கருவாத்தோட்டம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால் முறைப்பாட்டின் பிரதியை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 50 வயதுடைய பெங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.