போத்தலால் தாக்கி வைத்தியசாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி

மருத்துவ பரிசோதனைக்காக சிறை அதிகாரிகள் சந்தேக நபரின் கைவிலங்குகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அவர் தப்பிச்செல்ல முயற்சித்து உள்ளார்.

ஜுலை 24, 2025 - 17:44
போத்தலால் தாக்கி வைத்தியசாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி

கொழும்பு விளக்கமறியல் சிறையில் காவலில் இருந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, நேற்று தப்பிக்க முயன்றுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறை அதிகாரிகள் சந்தேக நபரின் கைவிலங்குகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அவர் தப்பிச்செல்ல முயற்சித்து உள்ளார்.

குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற, சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில்னபிரதான நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

தப்பிக்கும் முயற்சியின் போது, சந்தேக நபர் ஒரு கண்ணாடி போத்தலை உடைத்து பெண் சிறை அதிகாரியைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!