கைதிகளை சந்திக்க மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு, சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை ஏப்ரல் 11 ஆம் திகதி அவர்களது உறவினர்கள் சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.