வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் அதிபர்கள்
எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிதிக்குப் பிறகு அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை அதிபர்களை ஏற்கவேண்டும் என்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிதிக்குப் பிறகு அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் பாடசாலைகளில் இருந்தால், அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதுடன், பல மாணவர்கள் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.