ஐந்து பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, லங்கா சதொச, 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (21) முதல் குறைத்துள்ளது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, லங்கா சதொச, 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (21) முதல் குறைத்துள்ளது.
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலையாக 185 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 7 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 378 ரூபாயும், 425 கிராம் உள்ளுர் ரின் மீன் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 480 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 15 ரூபாயினாலும், நெத்தலி கருவாடு (தாய்) 50 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
செத்தல் மிளகாயின் புதிய விலை 1,780 ரூபாயாகவும், நெத்தலி கருவாடு (தாய்) 1,110 ரூபாயாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.