அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை
எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்கடி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாயால் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் மாதம் (05) ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.