ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

டிசம்பர் 25, 2023 - 13:29
ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். 

“கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது” அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமையப் பிரார்த்திப்போம்.

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம்,
ஒருபோதும் யதார்த்தத்தை மறக்கக் கூடாது.

“மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காகச் சிலுவையில் உயிர்த் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தம்மை எதிர்ப்பவர்களையும், தமக்கு இடையூறு செய்வோரையும் மன்னித்து அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் போக்கிக்கொள்ளுமாறு கிறிஸ்தவ மதம் நமக்குக் கற்பிக்கிறது.

“கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

“பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வாழ்த்துகிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களை வாழ்த்தியுள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!