IMF தங்கள் பங்கை 3அல்லது 4ஆவது வாரத்தில் செய்யும்: ஜனாதிபதி

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

மார்ச் 7, 2023 - 16:38
IMF தங்கள் பங்கை 3அல்லது 4ஆவது வாரத்தில் செய்யும்: ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் தங்களுடைய பங்களிப்பைச் ​செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

 "நாங்கள் இப்போது எங்கள் பங்கைச் செய்துள்ளோம், இந்த மாதத்தின் 3வது அல்லது 4வது வாரத்தில் சர்வதேச நாணய நிதியம் IMF இப்போது தங்கள் பங்கைச் செய்யும் என்று நம்புகிறோம்" என்றார்.

2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை  பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க  கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!