இன வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்
நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அம்பாறை, அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இந்தியாவின் ரூ.100 கோடியின் கீழ் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாயம், பால்பண்ணை மற்றும் மீன்பிடித் தொழில்துறையின் அபிவிருத்திக்கான 2 பில்லியன் உறுதிமொழி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
"இந்த நாட்டில் சகல இனங்களையும் சமமாக நடத்தும் ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியாகும். ஏனைய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் திகன, அக்குறணை, அளுத்கம ஆகிய இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. மதத் தலங்கள் தாக்கப்பட்டன. இந்த நாட்டில் மீண்டும் குழப்பம் தலைதூக்க விடமாட்டோம் என உறுதியளிக்கிறோம்." என்றார்.