நயன்தாராவுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்கள்?.. வைரலாகும் தகவல்

நடிகர், நடன அமைப்பாளராக இருந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. 

ஆகஸ்ட் 19, 2024 - 19:06
நயன்தாராவுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்கள்?.. வைரலாகும் தகவல்

நடிகர், நடன அமைப்பாளராக இருந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. 

அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

பிரபுதேவா தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,  விவாகரத்து செய்துவிட்டார். 

இதற்கிடையே நயன்தாராவை காதலித்த பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. 

இதனையடுத்து அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

இந்நிலையில் பிரபுதேவா குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகின்றன. 

அதாவது அவர் நயன்தாராவை காதலித்தபோது, 'இனி சினிமாவில் நடிக்கக்கூடாது, நமக்கு திருமணம் ஆனாலும் எனது முதல் மனைவியுடன் டச்சில்தான் இருப்பேன்' என ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டதாகவும்; அதன் காரணமாகத்தான் இருவரது காதலும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!