வடக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டை
வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவிட்டபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.

யுத்தத்தின் போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவெட்டுபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.
"எங்கள் நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்" என்ற கோரிக்கை இந்த அஞ்சல் அட்டைகளில் எழுதப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் நிலங்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த அதிகளவானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டமானது, வடக்கின் அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெறவுள்ளதாக மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்தது. (News21)