தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது.

மார்ச் 12, 2025 - 11:45
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (12) நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது.

விண்ணப்பிக்க விரும்பும் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் உத்தியோகத்தர்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை, நாளை13ஆம் திகதி போயா தினமான போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!