பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு 15,232,000 ரூபாயாகும்.

டிசம்பர் 7, 2023 - 14:14
பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

நாவக்காடு - கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு கடந்த  2ஆம் திகதி காலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இவர்கள், அங்கிருந்த தொழிலதிபரையும், அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டி, கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு 15,232,000 ரூபாயாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருந்த நிலையில், இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591289 / 071 – 8591301 / 071 – 8592126 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!