மேர்வின் சில்வா ஏன் கைது செய்யப்பட்டார்? காரணம் இதுதான்... வெளிப்படுத்திய பொலிஸார்!
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி நீண்ட விசாரணை நடத்தியதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த மனதுங்க, இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அவரைக் கைது செய்ததாகக் கூறினார்.
குறித்த நிலம் கிரிபத்கொடவில் அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி நீண்ட விசாரணை நடத்தியதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று, பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.