போக்குவரத்து விபத்துக்களை குறைக்க பொலிஸாருக்கு அதிநவீன Speed Gun
இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Speed Gun கருவிகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர்.
இரவு நேரத்திலும் இந்த கருவியை மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் என்றும், 1200 மீட்டர் தொலைவில் வரும் வாகனத்தை கூட இந்த கருவியால் அளவிட முடியும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன், காரை ஓட்டிய வேகம், ஓட்டும் நபரின் புகைப்படம், காரின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.