முக்கிய வழக்கு விவரங்களை கசியவிட்ட பொலிஸார்; வெளியாகிய புதிய சுற்றறிக்கை!
வர்த்தகர் வசந்த பெரேராவின் கொலை விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளின் தொழில்முறை நடத்தை மீதான கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் அடையாளங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ் மா அதிபர் (IGP) நேற்று வெள்ளிக்கிழமை (12) புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார்.
வர்த்தகர் வசந்த பெரேராவின் கொலை விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளின் தொழில்முறை நடத்தை மீதான கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் விசாரணைகள், வாக்குமூலங்கள் மற்றும் ஏனைய முக்கியத் தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவலின் பிரகாரம், குறித்த சுற்றறிக்கையானது விசாரணைகளுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு முன்னர் வழங்கப்பட்ட இதேபோன்ற கட்டளைகளுக்கு குறித்த சுற்றறிக்கை துணைபுரிகிறது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.