போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பொல்துவ சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.
இதேவேளை, இன்று கொழும்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் எதிர்ப்பு பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் (UTUJC) ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.