சிறுமி வன்புணர்வு - கான்ஸ்டபிளுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, கல்கிசை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 வருட கடூழிய சிறைத்தண்டனைகளும் ஒரே நேரத்தில் தொடரும் என தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 250,000 இழப்பீடு மற்றும் 10,000 அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தாவிட்டால், மேலும் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அயலவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு சிறுமியும் அவரது தாயாரும் கல்கிசை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொடர்பு விவரங்களை கான்ஸ்டபிள் ஆரம்பத்தில் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் கான்ஸ்டபிளுக்கும் சிறுதிக்கும் இடையே காதல் உறவு உருவானதுடன், அதன் போது அவர் பலமுறை உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், கான்ஸ்டபிள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது பெற்றோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுவில் புகார் அளித்தனர்.