சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.

சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.
நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் பிரதான வீதி மற்றும் மலைப் பகுதியில் உள்ள வன பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள் வீசப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாத்திரிகர்கள் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் கழிவுகளை ஆங்காங்கே வீசி விட்டுச் செல்வதால், அப் பகுதியில் பாரிய சுற்றாடல் மாசு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.