2024 டிசெம்பருக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் முடிக்க திட்டம்!
பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை செயற்பாடுகள், பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா முடக்க நிலை காரணமாக தள்ளிப்போன அனைத்துப் பாடத்திட்டங்களையும் எதிர்வரும் 2024 டிசெம்பர் மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகள் விடுமுறை தொடர்பில் தெரிவித்த அவர், எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்றார்.
முதலாம் தவணை செயற்பாடுகள்
பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை செயற்பாடுகள், பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திலேயே முதலாம் தவணை செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தது.
எனினும், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி முதலாம் தவணையை ஆரம்பித்து, நாங்கள் அதை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம் என கல்வியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.