நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலை நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 52 முதல் 66 நாட்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி இந்த வாரம் பாராளுமன்றத்தை கலைத்தால், பெரும்பாலும் நவம்பர் கடைசி வாரத்தில் சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.