இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை விவாதிக்க பாராளுமன்றம் அனுமதி
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அதில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு 83 வாக்குகளும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 33 மேலதிக வாக்குகளுடன், இணையத்தள அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.