இந்திய மண்ணில் தரமான சம்பவத்தை செய்த பாபர் அசாம்.. கோலிக்கு சரியான போட்டி!
பாபர் அசாம் சிறிய அணிகளுக்கு எதிராகவும், சொந்த மண்ணிலும் மட்டுமே சிறப்பாக ஆடக் கூடியவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிராக மட்டும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்தார். ஆனால் பலம் வாய்ந்த அணிகளான வங்கதேசம், இலங்கை, இந்தியா அணிகளுடன் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இதனால் பாபர் அசாம் சிறிய அணிகளுக்கு எதிராகவும், சொந்த மண்ணிலும் மட்டுமே சிறப்பாக ஆடக் கூடியவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலிக்கு நிகரான திறமை வாய்ந்த வீரர் என்று பாகிஸ்தான் அணியின் ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர்.
ஆனால் ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் சொதப்பியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஐதராபாத் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையில், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நியூசிலாந்து அணியின் ஹென்றி, ஃபெர்குசன், மிட்செல் உள்ளிட்ட வீரர்களின் ஓவர்களில் கவர் திசையில் பவுண்டரி விளாசி பாபர் அசாம் அசத்தினார்.
நீண்ட வாரங்களுக்கு பின் பாபர் அசாம் மீண்டும் தனது ட்ரேட் மார்க் கவர் பவுண்டரியை அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 80 ரன்கள் சேர்த்தார்.
அந்நிய மண்ணில் பாபர் அசாமின் ஆட்டம் பெரியளவில் இருக்காது என்று விமர்சித்து வந்த நிலையில், முதல்முறையாக இந்திய ஆடுகளத்தில் களமிறங்கி அரைசதம் அடித்து அசத்தியிருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பாபர் அசாமின் பேட்டிங் டெக்னிக் சிறப்பாக உள்ளது. இதனால் விராட் கோலி சரியான போட்டியாக பாபர் அசாம் இருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.